விரைவில் டிஜிட்டல் மயம்!
வங்கிப் பணியாளர்கள் எல்லாம் தேர்வு எழுதித்தான்
வருகிறார்கள். மளிகைக் கடைப் பணியாளர்கள் எந்தத் தேர்வும் எழுதாமல் வருகிறார்கள்.
வங்கிப் பணியாளர்களை விட மளிகைக் கடைப்
பணியாளர்கள் விரைவாகப் பணியாற்றுகிறார்கள். இருவர் கையிலும் கணிப்பொறிகள் இருக்கின்றன.
இருந்து என்ன பயன்? வங்கிப் பணியாளர்களின் கைகளில் கணிப்பொறி வரும் போது மெதுவாக
இயங்க ஆரம்பித்து விடுகின்றன.
வங்கிகளில் பணத்தை இருப்பு வைப்பதற்குள்
போதும் போதுமென்று ஆகி விடுகிறது. நீண்ட வரிசை காத்திருக்கிறது. காத்திருந்து முறையை
அடைந்தால் வங்கிப் பணியாளர் கையால் ஒரு முறை பணத்தை எண்ணுகிறார். இயந்திரத்தில் விட்டு
மூன்று முறை எண்ணுகிறார்.
இதில் வரைவோலை எடுப்பது என்றால்... சொல்வதற்கில்லை.
அரை நாளை ஸ்வாஹா செய்து கபளிகரம் பண்ணி விடுகிறார்கள்.
நாட்டில் ஏ.டி.எம். எனும் பணம் எடுக்க
உதவும் இயந்திரங்கள் மட்டும் இல்லையென்றால் வங்கியில் பணம் எடுக்க மருத்துவ விடுப்பு
போட்டுதான் செல்ல வேண்டும். நல்ல நேரத்தில் ஏ.டி.எம்.மைக் கண்டுபிடித்தார்கள்.
இப்படிப்பட்ட வங்கிப் பணியாளர்களே நாட்டில்
நிறைய இருப்பதால் நாடு டிஜிட்டல் மயம் ஆவதற்கு நீண்ட நாள் பிடிக்காது. விரைவிலே ஆகி
விடும். தாங்க முடியலடா சாமி!
மளிகைக் கடைக்காரர்களை வங்கி நடத்தச் சொன்னால்
அருமையாக நடத்துவார்கள் என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment