20 Oct 2017

தீராத தேர்வுப் பொழுதுகள்

தீராத தேர்வுப் பொழுதுகள்
அன்றொரு பொழுதில்
சலிப்புற்று நின்ற என்னிடம்
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை நீட்டினீர்கள்
பின்னொரு காலத்தில்
விரக்தியுற்று நின்ற என்னிடம்
போட்டித் தேர்வுக்காக விண்ணப்பிக்கக் கூறினீர்கள்
காலம் கடந்ததொரு தலைமுறை யுகத்தில்
எல்.கே.ஜி.க்கான பிள்ளைக்கான சேர்க்கைக்காக
எனக்கொரு தேர்வு வைப்பதாகப் பயமுறுத்தினீர்கள்
நாளை ஒரு பொழுதில்
பேரப் பிள்ளைகளுக்கான சேர்க்கைக்காக
தாளாத முதுமை பருவத்தில்
எமக்கொரு தேர்வு வைப்பதாக சொல்ல மாட்டீர்கள் என்று
நம்ப நான் தயாராக இல்லை
அதையும் தாண்டி நடுக்குற்ற என் விரல்களுக்கு
அப்பொழுதில்,
பேனா பிடித்தெழுதும் வலுவில்லை என்று
நான் சொல்வதை நம்ப நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...