ஏன் அப்படிக் கத்தினாய்?
"எனக்கு எப்படிப் புரிகிறதோ, அப்படித்தான்
நான் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு எப்படிச் செய்ய வருகிறதோ அப்படித்தான் நான்
செய்ய வேண்டும். என் செளகர்யம் எனக்கு முக்கியம். விளைவுகளுக்கு நான்தான் பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டும் எனும் போது என் போக்குக்குத்தான் நான் வாள் வீச வேண்டும். எப்படி
வாள் வீச வேண்டும் என்று குறிப்புகள் வழங்குபவர்கள் பின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்ற
மாட்டார்கள் என்பதுடன் மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டால் கண்ணில் படாமல் காணாமல் போய்
விடுவார்கள்.
நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன்
என்பதற்கான அடையாளம்தான் என் எழுத்து. நான் எப்படிச் செயல்பட விரும்புகிறேன் என்பதற்கான
அடையாளம்தான் என் முனைப்பும் ஆர்வமும்.
என்னுடையவைகளை நானே தீர்மானிப்பதும், நானே
முடிவெடுப்பதும் அவசியம். அப்போதுதான் எனக்கான அனுபவம் நான் அனுபவித்த அனுபவமாக இருக்கும்.
எனக்குதான் தெரியும் எனக்கு என்ன வேண்டும்
என்று. என்னை விட எனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?"
கடைசியாக இப்படி கர்ண கொடூரமாகக் கத்தினான்,
"என்னை எஸ்.கே.வா இருக்க விடுங்கடா எஸ்.கே.க்களா!"
*****
No comments:
Post a Comment