3 Oct 2017

நீ கண்டுபிடித்தக் குப்பைத் தொட்டி

நீ கண்டுபிடித்தக் குப்பைத் தொட்டி
எமது தண்ணீர்
உலகு கடந்து தாகம் தீர்க்கும்
ஒவ்வொரு நாட்டிற்கும்
ஏற்றுமதியாகும்
தானியத்தில் கலந்து.
உமது இறக்குமதி
மாசைக் கக்கும்
உலகு கடந்து
எமது நாட்டில்
பண்டமாய் வந்து.
உலகமயமாக்கல் என்ற பெயரில்
எமது வளத்தைப் பகிர்ந்து கொள்ளும் நீ
எம் நாட்டிற்கு அனுப்பி வைக்கும்
குப்பைகளை ஒரு போதும்
பகிர்ந்து கொள்ள மாட்டாய்.
உன் ஒப்பந்தங்கள் அப்படி
அல்பங்கள் போல.
உன் நவீனப் பார்வை அப்படி
அந்தக் குப்பை மேட்டில் நெளியும்
புழுப் பூச்சிகள் போல நாங்கள் என்பதாக.

*****

No comments:

Post a Comment