14 Oct 2017

இடைத்தேர்தல் மாற்றங்கள்

இடைத்தேர்தல் மாற்றங்கள்
முழுமையான ஐந்தாண்டுகளில்
ஓர் இடைத்தேர்தல் நடக்கும் போது
இரண்டு முறை ஓட்டளிக்கப்
பணம் கிடைக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக
தொகுதிக்குள் வர வாய்ப்பு கிடைக்கிறது
அரசாங்க கைங்கர்யங்கள் கிடைக்க
வாய்ப்பு இருக்கிறது
எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கையில்
மிச்சமிருக்கும் ஆண்டுகளில்
இன்னுமோர் இடைத்தேர்தல்
வந்து விடாதா என்று
ஆழ்மனதை அடியோடு மாற்றியும் விடுகிறது.

*****

No comments:

Post a Comment