14 Oct 2017

நினைவில் படரும் நம்பிக்கைகள்

நினைவில் படரும் நம்பிக்கைகள்
ந்த உணவு விடுதியில் தின்ற
கேவலமான உணவு
காலா காலத்துக்கும்
அந்த இடத்தை நினைவில் வைத்திருக்கும்
அந்த உணவு கூட கிடைக்காமல்
குழந்தையைக் கையில் ஏந்தி
யாசகம் கேட்டவளின் முகம்
பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்த
மறுநொடி மறந்து விடும்.
உணவிற்குப் பின் ஒரு வயிற்றெரிச்சல் இருப்பது
எனக்கு அல்சராகவும்
அவளுக்குப் பசியாகவும் இருக்கக் கூடும்.
ஓயாமல் பேருந்தில் அலைபவனுக்கு
நல்ல உணவு கிடைப்பதற்குப்
பாக்கியம் செய்திருக்க வேண்டும்
என்று நான் நம்பிக்கை இழக்கும் பொழுதில்,
ஓர் உணவு விடுதியின் முன்
குழந்தையோடு யாசகம் கேட்கும் தாய்க்கு
வயிரார சாப்பிட்டு வருபவர்களின் மீது
நம்பிக்கை இருக்க வேண்டும்
வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து விட்டது போல
வாழ்வின் இந்தச் சிறுபொழுதில்
எதாவது கிடைக்கும் என்று.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...