11 Oct 2017

காலை எழுந்தவுடன் மப்பு

காலை எழுந்தவுடன் மப்பு
            குடியால் வீழ்ந்த குடும்பங்களைக் கண்டாயிற்று. அடுத்து குடியால் வீழும் ஒரு சமூகத்தைக் காண இருக்கிறோம்.
            எந்தச் சமூகம் அந்தச் சமூகம் என்றால்... நீங்கள் நினைப்பது போல ஏதோ ஒரு சாதிச் சமூகம் அன்று. எல்லாச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ்ச் சமூகந்தான் அது.
            "காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு - மாலை முழுவதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா" என்று பாரதியார் பாப்பாவுக்குப் பாடினாரே,
            அதை அப்படியே உல்டாவாக்கி,
            "காலை எழுந்தவுடன் மப்பு - பின்பு போதை கொடுக்கும் நல்ல பாக்கு - மலை முழுவதும் மொடாக்குடி - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு மாமா!" என்று பாப்பாக்கள் மாமாக்களுக்கு பாட வேண்டிய நிலைக்கு உள்ளாகி விட்டது நம் சமூகம்.
            சாலையில் நாம் சந்திக்கும் நால்வரில் மூவர் குடி போதையோடனோ அல்லது போதைப் பாக்குகள் தரும் போதையுடனோ இருக்கிறார்.
            தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக்கில் மதுச்சரக்கு வாங்க முடியும் என்றால், தமிழகத்தின் எந்தப் பெட்டிக் கடையிலும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை வாங்க முடிகிறது.
            திருடனைாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் பட்டுக்கோட்டையார்.
            குடிப்பவர்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது.
            போடுபவர்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால் போதைப் பாக்குகளைப் போடுபவர்களை திருத்த முடியாது.
            மற்றபடி யாரையும் நம்பி... யாரையும் என்றால் யாரையுந்தான்... எந்தப் புண்ணியமும் இருக்கப் போவதில்லை.
            என்ன நிலைக்கு ஆளாகி விட்டாய் என் தமிழ்ச் சமூகமே!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...