19 Oct 2017

தேர்தல் செலவின் தணிக்கையாளர்களுக்கு...!

தேர்தல் செலவின் தணிக்கையாளர்களுக்கு...!
மாமன்
மச்சான்
பங்காளி என சொந்த பந்தத்தில்
பலரையும்
தூர ஊர்களின் நட்பு வட்டத்தில்
சிலரையும்
பொறாமை கொள்ள செய்து விடுகிறது
எம் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில்
ஓட்டுக்கு ஆயிரம் என கணக்கிட்டுக் கொண்டாலும்
நான்கு தலைக்குக் கிடைக்கும் நாலாயிரம்.
இருபது முப்பது வருடங்களாய்
இடைத்தேர்தல் எதுவும் பார்க்காத
பல தொகுதிகளின் புகைச்சலும், வயிற்றெரிச்சலும்
வாங்கிய நாலாயிரத்தை
அமங்கலச் செலவில் முடிப்பதை
நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும் என்பதால்
தினசரி வரவு - செலவு கணக்கு நோட்டை
தயவு செய்து நேரில் வந்து ஒரு முறை
தணிக்கை செய்து விடுங்கள்
தேர்தல் கருத்துச் சொல்லும் பார்வையாளர்களே!

*****

No comments:

Post a Comment