21 Oct 2017

புரட்சி மீன்கள் சுவைக்கப்படட்டும்

புரட்சி மீன்கள் சுவைக்கப்படட்டும்
இந்த மீன் நல்ல நதியில் நீந்தியது
சாக்கடை நதியில் நீந்தும்
அவலம் வந்தும் நீந்திக் கொண்டிருக்கிறது
அதன் முன்னோர்கள்
மிக மிக நன்னீர் நதியில் நீந்தியவர்கள்
அதன் பிள்ளைகள், பேரக் குட்டிகள்
இதனினும் மோசமான
நாற்ற நதியில் நீந்துவார்கள்
முட்டையிடும், குஞ்சு பொரிப்பதும்
அதன் வேலை என்று
இப்போது கண்டித்து விடுதல் நல்லது
நாளை நதியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று
அது கொடி பிடித்தால்
துயரங்கள் வந்து சேரும்
அதனினும் அதைப் பிடித்து
அறுத்துத் தின்று செரித்து விடுவது
மிகவும் நல்லது
மற்ற மீன்களுக்கு
அது ஒரு பாடமாக இருக்கும்
புரட்சி என்பது பரவாமல் இருக்கும்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...