17 Oct 2017

வட்டப் பாய்ச்சல்

வட்டப் பாய்ச்சல்
தலைப்புச் செய்திகளுக்குப் பின்
அவன் எதுவும் கேட்பதில்லை
ஒரு பாடலைக் கடக்கும் அவன்
இன்னொரு சேனலின்
சண்டைக் காட்சியை நிர்தாட்சண்யமின்றி
நிராகரிப்புச் செய்கிறான்
விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கும்
ஒரு சேனலை வெறுப்போடு கடக்கும் அவன்
காமெடிச் சேனலில் சில நிமிடம் நிலைகொள்கிறான்
மீண்டும் மனம் பரபரக்க
செய்திச் சேனலுக்கே வந்து துழாவிப் பார்க்கிறான்
புதிய செய்திகள் ப்ளாஷ் ஆகிறதா என்று.
அவன் கையில் இருக்கும் ரிமோட்
மறுபடியும் ஒரு வட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிறது.

*****

No comments:

Post a Comment