11 Oct 2017

சொந்தங்கள், பந்தங்கள்

சொந்தங்கள், பந்தங்கள்
இனி சொந்தமுமில்லை
பந்தமுமில்லை என்று
தனித்துப் போராடி
அம்மா வாழத் தொடங்கி
இருபது ஆண்டுகள்
முடிந்த பின்
ரத்தப் பந்தம்தான் விட்டுடுமா
கூடிப் பொறந்த சொந்தம்தான் போயிடுமா
என்று எல்லா சொந்த பந்ததும்
மீண்டு வருவதற்கு
அவள் தன் மகனை
டாக்டராக்க வேண்டியிருந்தது.

*****

No comments:

Post a Comment