17 Sept 2017

மலிவுவிலைக் காதலர்கள்

மலிவுவிலைக் காதலர்கள்
ரோஜாக்கள்
உச்ச விலையில் விற்கும்
பிப்ரவரி 14
உன் மீதான என் காதலைச் சொல்ல ஏற்றதன்று
மாறாக
மல்லிகை மலிவாக விற்கும்
சீசனே
நேசம் சொல்ல ஏற்றதென்றேன்
அதுதான் சரி என்பது போல
ஆடித் தள்ளுபடி வரும் போது
காதலின் பரிசாக புடவையொன்று
எடுத்துத் தருமாறு கேட்டாய் நீ.

*****

No comments:

Post a Comment