டாஸ்க் பாஸ் டாஸ்க்!
டாஸ்க்குகளால் நிரம்பி வழிகிறது தமிழகம்.
சில பிராந்தியங்களில் டாஸ்மாக்கை அமைப்பதைப்
பெரிய டாஸ்க்காகக் கொண்டு போர்க்கால அடிப்படையில் டாஸ்க்குகள் நிறைவேற்றப்படுகின்றன.
டாஸ்க்குகளுக்கு நேர்ந்த காலக் கொடுமை அது!
என்றாலும், அது போன்ற டாஸ்க்குகளை அலேக்காக
தூக்கிக் கடாசி விட்டுப் பார்த்தால், சில டாஸ்க்குகள் முக்கியமானவை. அவைகள் காலத்துக்கும்
இருக்க வேண்டும் என்பதற்காக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம்.
அவைகள் அப்படி ஒன்றும் புதியதில்லை. ஆனாலும்
பாருங்களேன்!
1. பொதுவாழ்வில் தூய்மை
2. தனி மனித வாழ்வில் ஒழுக்கம்
3. அரசியல்வாதியானால் ஊழல் செய்யாமை
4. அரசு ஊழியரானால் லஞ்சம் வாங்காமை
5. ஆசிரியரானால் ரியல் எஸ்டேட், வட்டிக்கு
விடுதல், இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஆதல் என்று உபதொழில் புரியாமை
6, வாக்காளாரானால் ரோஸ் நிறத்து ரெண்டாயிரம்
நோட்டுக்கு மயங்கி ஓட்டுப் போடாமை
7. தமிழன் என்றால் தமிழ் வழியில் படிக்க
வைக்க அருவருப்புக் கொள்ளாமை
இப்படியெல்லாம் டாஸ்க்குகள் கொடுத்தால்
தமிழகம் ஸ்தம்பித்து விடும் என்பீர்கள்!
இப்போது தமிழகம் ஸ்தம்பிக்கவில்லை என்று
யார் சொன்னது?
இப்போது தமிழகம் ஸ்தம்பிக்கிறது என்றால்
மேலே கூறிய எட்டு டாஸ்க்குகளும் எப்போதும் வெறும் டாஸ்க்குகளாகவே இருப்பதுதான் காரணம்.
*****
No comments:
Post a Comment