சம்புலிங்கத்துக்கு வேறு எங்கும் கிளைகள்
இல்லை!
சமத்து சம்புலிங்கம் பெரிய அரசியல் தலைவரானார்.
புகழ் திக்கெட்டும் பரவ அரம்பித்தது.
சம்புலிங்கத்துக்குத் தெரிந்தவர் என்று
சொல்லிக் கொண்டு பலர் வந்தனர். அவர்களில் யார் உண்மையானவர்கள், போலியானவர்கள் என்பதை
அநாயசமாகக் கண்டுபிடித்து அசரடித்துக் கொண்டு இருந்தார் சம்புலிங்கம்.
"இது எப்படித் தலைவரே?" என்று
அசந்துப் போனான் சோதிலிங்கம்.
"அது ஒண்ணும் பெரிய விசயமே இல்ல.
இப்பப் பாரு!" என்று சம்புலிங்கத்தைப் பார்க்க வந்த கோதா ஒருவரிடம் விசாரிக்க
ஆரம்பித்தார்.
"நானும் நீங்களும் ஒண்ணாப் படிச்சோம்!"
என்றார் பார்க்க வந்தவர்.
"நம்புற மாதிரி இல்லியே!" என்றார்
சம்புலிங்கம்.
"ஒண்ணாப் படிச்சதையா?" என்றார்
வந்திருந்த கோதா.
"நான் படிச்சேங்றதை!" என்றார்
சம்புலிங்கம்.
அப்படி ஓர் எளிமையான வாழ்வை அமைத்துக்
கொண்டதால்தான் பல போலிகளை அடையாளம் காண முடிகிறது சம்புலிங்கத்தால்.
இது தெரியாமல் அந்தக் காலத்தில் படித்துத்
தொலைத்த காரணத்தால்தான் போலிகள் மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது படித்தப் பேதைகளுக்கு.
*****
No comments:
Post a Comment