நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நீதி!
குழியில் விழுந்து விட்ட ஒரு மனிதன், ஒரு
சிங்கம், ஒரு பாம்பு கதையைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இவைகள் மூவரையும் ஒரு மனிதன் காப்பாற்றுகிறான்.
கதையின் பின் பகுதியில்,
காப்பாற்றிய மனிதனுக்குக் காப்பாற்றப்பட்ட
மனிதனால் உயிர் போகும் அளவுக்குப் பிரச்சனைகள் வருகின்றன.
செய்த உதவிக்கு, பதில் உதவி செய்ய வேண்டிய
மனிதன் உதவாமல் இருந்து விடுகிறான். உதவாமல் இருந்தாலும் பரவாயில்லை. உபத்திரவம் வேறு
அல்லவா கொடுக்கிறான்.
நன்றியுணர்வோடு மனிதன் செய்ய வேண்டிய
பதில் உதவியை சிங்கமும், பாம்பும் செய்து தங்களைக் காப்பாற்றிய மனிதனை உயிர் போகும்
அபாயத்திலிருந்து காப்பாற்றுவதாக கதை முடிகிறது.
மனிதன் நய வஞ்சகன் என்ற இக்கதையின் நீதியை
விட, ஓர் உதவி காப்பாற்றாமல் போனாலும் மற்றொரு உதவி காப்பாற்றுகிறது என்ற நீதி நன்றாக
இருக்கிறது அல்லவா!
கதைகளுக்குள் ஆயிரம் நீதிகள் இருக்கின்றன.
நாம் எந்த நீதியை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment