22 Sept 2017

மகளுக்குச் சொல்ல...

மகளுக்குச் சொல்ல...
அவன் அடிப்பதைப் பொருட்படுத்தாதே
திட்டுவதைக் கண்டு கொள்ளாதே
உன் பெண்மையைக் கொச்சைப்படுத்தும்
அவன் செயல்களைக் கண்டு பொங்கி விடாதே
அவன் இப்படித்தான் என்பது தெரிந்தும்
மணமாகாதப் பெண்ணாய்
எவ்வளவு நாட்கள் உன்னை வைத்திருப்பது
என்ற கேள்விக்கு விடை காணவே
கட்டிக் கொடுத்தோம்
இனி எங்கள் பொறுப்பு முடிந்தது
உன் பொறுப்பு தொடங்குகிறது
சிறிது காலம் அவன் ஆடும் ஆட்டத்தை
பிரசவ வேதனையோடு இதுவும் ஒரு வேதனையென
பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திரு.
குடிக்கின்ற குடிக்கு
உன் குடிகாரக் கணவன்
விரைவில் இறந்து விடுவான்
பிறகு நீதான் உன் குடும்பத்தைக்
காப்பாற்ற வேண்டும் மகளே!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...