கோடாங்கி வாக்கு
மந்திரவாதியிடம்
சொன்னதற்கு
உடுக்கை அடித்து
வெற்றிலையில்
மை போட்டுப் பார்த்து
குறி சொன்னான்,
"உங்க
ஊரு
ஆற்று மணல்
எல்லாம்
கண்காணாத தேசம்
போயிட்டு!
ஆற்றுப் பள்ளம்
எல்லாம்
குழாய்ப் பதிச்சு
காற்றாய் எடுக்கப்
போறாங்க!"
கண்கெட்டுப்
போவதற்கு முன்
கண்காணாத தேசம்
போயிடுங்க!"
அன்றவன் சொன்னது
கேட்டு
அகன்றவர்களுக்கு
கூவம் நதிக்கரையிலாவது
குடிசை கிடைத்தது!
அகலாதவர்களுக்கு
பாவம் செத்தபின்
சுடுகாட்டுக்கும்
இடமின்றி
ஆலைக் கழிவுகளோடு
கூழ்மமாகி
அடையாளமின்றி
அழியத்தான் வரம் கிடைத்தது!
*****
No comments:
Post a Comment