புதைந்த மூன்று லகரங்கள்
ஆசையின் காரணமாக சென்று விழுந்த வலைதான்
எஸ்.கே. ப்ளாட் எனும் நிலம் வாங்க ஆசைப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல
பணம் சேர்த்துக் கொண்டிருந்தான எஸ்.கே. பணம் ஓரளவு மிகுந்து கொண்டே வர, எதையாவது
வாங்க வேண்டும் என்ற எண்ணம் எஸ்.கே.விற்கு மிகுந்து கொண்டே வந்தது.
என்ன நினைத்தானோ தெரியவில்லை. ப்ளாட்
எனும் நிலம் வாங்க வேண்டும் என்று பார்ப்பவர்களிடம் பேச ஆரம்பித்து அதன் மோசமான விளைவுகளில்
சிக்கிக் கொண்டான்.
எம்.கே. எப்படிப்பட்ட பிராடு என்பது தெரிந்தும்
அவன் சொல்லிய ப்ளாட் எனும் நிலம் வாங்கும் திட்டத்தில் விழுந்து விட்டான். இது ப்ளாட்
எனும் நிலம் வாங்கும் ஆசை தன்னிடம் இருந்ததால் நிகழ்ந்தது என்றே இன்றளவும் எஸ்.கே.
சொல்லி வருகிறான்.
எம்.கே. சொல்லவும், எஸ்.கே. வலையில் விழவும்
சரியாக அமைந்து விட்டது. எம்.கே.வின் வலையில் சிக்கிய மீனாக துடிக்க வேண்டியவனானான்
எஸ்.கே. சில ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மூன்று லகரம் பணத்தைக் கொடுத்து வசமாக சிக்கிக்
கொண்டான்.
கொடுத்த மூன்று லகரத்தை எப்படி மீட்பது?
அதற்கு ஈடாக ப்ளாட் எனும் நிலத்தை எப்படிக் கையகப்படுத்துவது? என்பது இன்று வரை எஸ்.கே.விற்குப்
புரியாத புதிர்.
அந்தப் புதிரிலிருந்து மீள முடியாது என்பது
எஸ்.கே.விற்குத் தெரிய வந்த போது அந்த மூன்று லகரத்தையும் தலை முழுகி விடுவது என்ற
முடிவுக்கு வந்தான்.
இனி மூன்று லகரத்தை எப்படிச் சம்பாதிப்பது
என சிந்தித்துக் கொண்டிருக்கிறான். நிலைமை அப்படி மோசமாகி விட்டது. சோதாக்களை வைத்து
காரியமாற்றும் போது இப்படித்தான் நிகழும் கடைசியாக ஒருமுறை புலம்பினான் எஸ்.கே.
அதை எதிர்கொள்ள இயலாமல் விலகிக் போவதைத்
தவிர எஸ்.கே. விற்கு வேறு என்ன வழி இருக்க முடியும்?
*****
No comments:
Post a Comment