நாக்கு எனும் ஆயுத விற்பனையாளன்
எஸ்.கே.வாக நெருங்கிச் சென்று பேசும் போது
அவர்கள் இஷ்டத்திற்கு வார்த்தைகளை விட்டு விடுகிறார்கள். எஸ்.கே. மிகுந்த கவனமாக வார்த்தைகளைப்
பயன்படுத்தும் போதே இப்படிப்பட்ட விபத்தும் நிகழ்ந்தும் விடுகிறது.
வார்த்கைளால் மிக மூர்க்கமாக தாக்கும்
காட்டுமிராண்டிச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் ஒரு விழுக்காடேனும்
உண்மை இல்லாமல் இருக்காது என்பதை இது போன்ற சந்தர்ப்பங்களில் எஸ்.கே. உணர்ந்து கொள்கிறான்.
அணுகுண்டுகளை தடை செய்வதைப் போலவே, ஆத்திரத்தில்
பிரசவிக்கும் வார்த்தைகளையும் தடை செய்து கொள்வது ஜனநாயகப் பூர்வமான ஒரு மனிதன் தனக்குத்
தானே செய்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஆத்திரமான ஒரு சொல்லே, அணுகுண்டை இயக்குவதற்கான
கட்டளையைப் பிறப்பிக்க வைக்கிறது.
அனைத்து ஆயுதங்களுக்கும் பின்னால் ஒரு
வார்த்தை மிகப் பெரிய ஆயுதமாக மறைந்து நிற்கிறது.
வார்த்தைகள் தாக்கிய பின்பே ஆயுதங்கள்
தாக்கத் தொடங்குகின்றன.
நாக்கு சரியாக உள்ள ஒரு மனிதனுக்கு ஆயுதங்கள்
தேவைப்படாது. நாக்கை விட பலமான ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
*****
No comments:
Post a Comment