7 Sept 2017

கண்ணாடியான காணவில்லை போஸ்டர்

கண்ணாடியான காணவில்லை போஸ்டர்
ஆற்றில் குளிக்கச் சென்ற
எம் பெண்டிர்களைக் காணவில்லை
குளத்தில் நீர் விளையாடப் போன
எம் குழந்தைகளைக் காணவில்லை
ஏரியில் மீன் பிடிக்கப் போன
எம் ஆடவர்களைக் காணவில்லை
கம்மாய்க் கரையோரம் கதைப் பேசச் சென்ற
எம் பெரிசுகளைக் காணவில்லை
எங்கே என்று தேடத் தேட
ஆற்றைக் காணவில்லை
குளத்தைக் காணவில்லை
ஏரியைக் காணவில்லை
கம்மாயைக் காணவில்லை
காணவில்லை என்ற போஸ்டரில்
எங்களை நாங்களே
பார்த்துக் கொண்டோம்

*****

No comments:

Post a Comment