அரைப்படி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்
எஸ்.கே. நிலம் வாங்கி (ப்ளாட் அல்ல) விவசாயம்
செய்யும் யோசனையில் இருந்தான்.
இதனால் விவசாயம் வேண்டாம் என்று நம்பிக்கையின்றிப்
பேசும் பல நண்பர்களை அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
விவசாயம் செய்வதில் பல பிற்போக்கான சங்கதிகள்
இருப்பதாக அவன் அச்சுறுத்தப்பட்டான்.
விவசாயம் செய்கிறேன் என்று நீ தேவையற்ற
மன உளைச்சலை அடைவாய் என எச்சரிக்கப்பட்டான்.
நிலம் (ப்ளாட் அல்ல) வாங்காமல் பாதுகாப்பாக
அந்த எண்ணத்திலிருந்து வெளி வந்து விடு என்று அவன் அறிவுறுத்தப்பட்டான்.
அவனுக்குப் பண உதவி செய்வதாக வாக்களித்தவர்கள்
அவனது இந்த முடிவு அறிந்து அவனை மிரட்டுவது போல பேசத் தலைப்பட்டார்கள்.
எஸ்.கே. சளைக்காமல் அனைவர் கால்களிலும்
விழுந்து தன் முயற்சிக்கு ஆதரவு கேட்டு கெஞ்சினான்.
பாதி கிணறு தாண்டி விட்டு, மீதி கிணற்றில்
விழுவதா என்று அவன் கேட்ட போது அவனுக்கு ஆலோசனை சொன்னவர்கள் கீழ்கண்டவாறு உபதேசித்தார்கள்,
"விவசாயம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது. அதனாலத்தான் வேண்டாம்னு சொல்றோம்.
ஆனா, அரசிக் கடை வையுங்க பாஸ். மக்கள் எப்படியும் வாங்கித்தான் ஆகணும். நஷ்டம் வந்துடாது.
பொழைச்சுக்கலாம்!"
*****
No comments:
Post a Comment