7 Sept 2017

திருப்பி வழங்கப்படும் பட்டங்கள்

திருப்பி வழங்கப்படும் பட்டங்கள்
            கொஞ்சம் சரியாகச் செய்தால் இந்தச் சமுதாயம் கவனிக்க ஆரம்பித்து விடுகிறது. ரொம்பச் சரியாகச் செய்தால் பைத்தியக்காரன் என்று நினைத்து கவனிப்பதை விட்டு விடுகிறது.
            அதைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.
            வெற்றியோ, தோல்வியோ செயல்படுவதில் காட்டும் முனைப்பே வெற்றி. விளைவுகளைக் கண்டு வெற்றியைக் கணக்கிட்டால் எத்தனையோ முயற்சிகள் உலகில் நிகழ்த்தப்படாமல்தான் போயிருக்கும்.
            ஒவ்வொரு தோல்வியின் போதும் மனிதன் குழம்பி நிற்கிறான். மாறாக குழம்பி நிற்காமல் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று தொடர்ந்து செல்பவன் வரலாற்றில் நிற்கிறான்.
            தொடர்ந்து செல்ல செல்ல குழப்பங்கள் விடுபடுகின்றன. தயக்கங்கள் தடைபடுகின்றன. முனைப்புகள் உண்டாகின்றன. தொடர்ந்து செல்வதன் சூட்சமம் இது.
            அவரவர் கேள்விக்கானப் பதில் அவரவர்கள் தொடர்ந்து செல்லும் பாதையில் இருக்கின்றது.
            யார் ஒருவர் தன் பயணத்தை நிறுத்திக் கொள்ள விரும்புகிறாரோ, அவர் மட்டும் தன் கேள்விக்கானப் பதிலை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
            தன் சொந்தக் கால்களால் பயணிக்க விரும்புபவர்கள், தன் சொந்தக் கரங்களால் புதியதை எழுத விரும்புபவர்கள் தங்கள் கேள்விக்கானப் பதிலைத் தாங்கள்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
            தேடி அடைபவர்கள் இறுதியாக சமுதாயம் அவர்களுக்கு அளித்த பைத்தியகாரப் பட்டத்தை சமுதாயத்திற்கே திருப்பி அளித்து விடுகிறார்கள்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...