ஒவ்வொரு வரியாக…
ஆறடிக்கும் சற்று குறைவான மனிதனை
ஆறு துண்டுகளாகப் போட்டு
சேவை வரி
வருமான வரி
தொழில் வரி
மதிப்புக் கூட்டு வரி
விற்பனை வரி
செலுத்தி
ஆறாவதாக எஞ்சிய துண்டை
கார்ப்ரேட் வரியாகச் செலுத்தி விட்டால்
குவிந்து விடும்
வெளிநாட்டு முதலீடுகள்
பிறகு அவர்கள்
தேவைப்பட்ட போது
எடுத்துக் கொள்ளட்டும்
ரத்தமுஞ் சதையுமான
லாபங்களை
ஈரக்குலையை உருவி
இதயத்தை நோண்டியெடுத்து!
*****
No comments:
Post a Comment