15 Sept 2017

பதவி குல்லாக்கள்

பதவி குல்லாக்கள்
            முல்லா கதை ஒன்றில்  தன்னுடைய சட்டையை நண்பருக்குக் கொடுப்பார்.
            சட்டையைக் கொடுத்து விட்டு அந்தச் சட்டையைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்.
            முதலில் அந்தச் சட்டை தன்னுடைய சட்டை என்பார்.
            அப்புறம் அந்தச் சட்டையைப் பற்றி பேச மாட்டேன் என்பார்.
            அந்தச் சட்டையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பார்.
            அந்தச் சட்டையைப் பற்றி மறந்து விட்டேன் என்பார்.
            சட்டையை வாங்கிய நண்பர் கிழிந்த சட்டையே பரவாயில்லை என்று முல்லாவிடம் வாங்கியச் சட்டையைக் கொடுத்து விட்டு ஒட்டம் பிடிப்பார்.
            சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் இதே நகைச்சுவையைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
            சட்டை என்ற இடத்தில் ஓர் அரசியல் பதவியை வைத்துப் பாருங்கள்.
            தலை சுற்றுகிறதா?
            அதாவது, முல்லா தன்னுடைய கெளன்சிலர் பதவியை நண்பருக்கு விட்டுக் கொடுத்தார். பார்க்கும் இடங்களில் எல்லாம் என்ன சொல்லியிருப்பார்?
            "கெளன்சிலர் அவர்தான். அந்தப் பதவி என்னுடையது!"
            இதில் ஓர் அவசியமான பின்குறிப்பு என்னவென்றால் கெளன்சிலர் என்ற பதவியை எடுத்து விட்டு எந்தப் பதவியையும் போட்டுப் பொருத்திப் பார்க்கலாம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...