இணைப்புத் தேசத்தில் ஓர் உரையாடல்
இந்தத் திருநாட்டில் கங்கை - காவிரியை
இணைக்கிறார்களோ இல்லையோ, ஆதாரை பான் எண்ணுடன்
இணைக்கச் சொல்கிறார்கள்,
ஆதாரை வங்கி எண்ணுடன் இணைக்கச் சொல்கிறார்கள்,
ஆதாரை கேஸ் சிலிண்டர் கணக்குடன் இணைக்கச்
சொல்கிறார்கள்
இதையெல்லாம் கேட்டு ஒரு இந்தியக் குடிமகன்
மயங்கி விழுந்துச் செத்தாலும் அவன் இறப்பைப் பதிவு செய்ய ஆதாரை இணைக்கச் சொல்கிறார்கள்.
அப்புறம் அவனுக்கு எதற்குப் பெயர்? ஆதார்
எண்ணே பெயராக இருக்கலாம். அப்புறம் அவன் தகப்பனுக்கு எதுக்குப் பெயர்? அவன் தகப்பனின்
ஆதார் எண்ணே அவன் தகப்பனின் பெயராக இருக்கலாம். இப்படி தாத்தன், தாத்தனுக்குத் தாத்தன்,
பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன், பூட்டனுக்குப் பூட்டன் என்று எல்லாம் ஆதார் எண்ணாக
இருக்கலாம்.
"ஹலோ! யார் பேசுறீங்க?"
"நான் 1234 5678 9011 பேசுறேன்!
2345 6789 1012 செளகரியமா இருக்காரா?"
"அது யாரு?"
"அதாங்க உங்க பையன். உங்க பையனோட
ஆதார் எண் அதானே?"
இப்படிப் பேசினால் போயிற்று!
*****
No comments:
Post a Comment