9 Sept 2017

கடன் என்றால் மாற்றுப் பாதையில் செல்லுங்கள்!

கடன் என்றால் மாற்றுப் பாதையில் செல்லுங்கள்!
            நல்ல முயற்சியில் முன்னேறிச் செல்பவர்களைப் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குபவைகள் நம் நாட்டு வங்கிகள்.
            ஒரு கடனை ஒரு வங்கி மேலாளர் நினைத்தால் எப்படியும் தடுத்து விடலாம் என்பதற்கு கிராமப் பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான வங்கிகளின் மேலாளர்களே சரியான சான்றுகள்.
            அவர்கள் இப்படி எத்தனையோ தொழில் முனைப்பின் கனவுகளைக் குட்டிச் சுவராக்கி இருக்கிறார்கள். தவிடு பொடி செய்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.
            இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக கடன் இல்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல் பல நாட்களுக்கு பல மணி நேரம் காக்க வைத்து இம்சை செய்வார்கள் பாருங்கள்!
            ஒரு மனிதனுக்கு உதவ முடியவில்லை என்றால், அவனை அலட்சியப்படுத்தி அசிங்கப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா! அதையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் வங்கிக் கடன் கொடுப்பதற்கு முனைப்பாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
            கடைசியாக கடன் பெற வந்தவர்க்கு கடன் வாங்கத் தகுதியில்லை என்பதைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்கி தங்களை உத்தமராக்கிக் கொள்வார்கள்.
            சாராயம் காய்ச்சுவதற்கு மல்லையாக்களுக்குக் கோடி கோடிகளாகக் கடனைக் கொட்டிக் கொடுக்கின்றார்கள் வங்கியாளர்கள். நிலத்தைக் கெடுக்காத இயற்கை வேளாண்மை என்றால் பிடரியில் அடித்து வெளியில் தள்ளுகிறார்கள். கடன் வாங்கிச் செய்தால் அது எப்படி இயற்கை வேளாண்மை ஆகும் என்று கருதுகிறார்களோ என்னவோ!

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...