பிரியாணியின் அரசியல்
வரலாறு
பிரியாணி தின்ன ஆசைப்பட்ட
மந்தை ஆடுகளைப் பற்றி
கேள்விபட்டிருந்த நரித்தலைவர்கள்
சிபிச் சக்கரவர்த்தி போல்
தொடைகளில் கொஞ்சம் சதை வெட்டி வைத்து
தங்களைச் சிங்கமாக்க வாக்களித்தால்
ஆளுக்கொரு பிரியாணிப் பொட்டலம்
தருவதாய் ஆசை காட்ட
ரத்தம் சொட்ட சதைகளை
வெட்டி வைத்த மந்தை ஆடுகள்
வாயில் எச்சில் சொட்ட சொட்ட
காத்திருக்கத் தொடங்கின
பிரியாணி தின்ன
*****
No comments:
Post a Comment