20 Sept 2017

அன்பைப் பார்க்காதவர்கள்

அன்பைப் பார்க்காதவர்கள்
ன்பைப் புரிந்து கொள்ளாமல்
அன்பாக இருப்பவர்
வன்முறையாளராக இருக்கிறார்
அவர் தன் வன்முறைக்கும்
அன்பைக் காரணம் சொல்கிறார்
உண்மையில் அன்பாக இருத்தல் என்பது
அன்பாக இருத்தல்தான்
அன்புக்காக வன்முறையைப் பிரயோகித்தல் அன்று
அன்புக்காக பிரயோகிக்கப்படும் வன்முறையில்
வெறுப்பு விதைக்கப்படுகிறது
வெறுப்பை விதைக்கும் அன்பை
கண்மூடித்தனமான அன்பென்று சொன்னால்
மன்னியுங்கள் நண்பர்களே
நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு
அன்பைப் பார்க்காமலே
நீங்கள் அன்பைப் பற்றிச்
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...