சிலரை எப்படித் திருத்துவது?
எஸ்.கே. சமீப காலமாக எல்லாவற்றிலும் ஓவராகப்
போகிறான்.
ரொம்ப சுத்தம், மண்டைக் கனம், செய்வது
போல கேட்டு விட்டு அதை வேண்டுமென்றே செய்யாமல் விடுவது, தன்னைப் பெரிய பருப்புப் போல
கருதிக் கொண்டு பேசுவது என்று அவன் பண்ணும் அழிச்சாட்டியம் எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
என்னவோ அவன்தான் உலகத்தில் பெரிய பெர்பக்சனிஸ்ட்
போலவும், மற்றவர்கள் எல்லாம் உதவாக்கரை போலவும் என்பது போலவும் நடந்து கொள்கிறான்.
அவன் பேசுவதுதான் சரி என்பது போலவும்,
மற்றவர்கள் பேசுவது எல்லாம் முட்டாள்தனம் என்பது போலவும் பேசுகிறான்.
இவ்வளவு மண்டைக்கனம் எஸ்.கே.விற்கு ஆகாது.
என்ன செய்வது? இப்படி மண்டைக்கனம் படைத்தவர்கள் எல்லாரும் வீழ்ந்துதான் போயிருக்கிறார்களே
தவிர, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
எஸ்.கே. போன்ற மண்டைக்கனம் பிடித்தவர்களோடு
மல்லுக்கு நிற்பதை விட, அவர்களின் மண்டைக்கனத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான்
நல்லது. அவர்களாகவே தங்கள் மண்டைக் கனத்தால் எதிலாவது போய் முட்டிக் கொள்வார்கள்.
சரியென்று நாம் பாட்டுக்கு இருந்தாலும்
அதைக் கிண்டிக் கிழங்கு எடுப்பது போல எஸ்.கே. நடந்து கொள்கிறான். பேய்க்கு இரங்கினாலும்
எஸ்.கே.வுக்கு இரங்கக் கூடாது என்ற பழமொழி இதனால்தான் ஏற்பட்டது. அவ்வளவு எரிச்சல்களை
அவன் உருவாக்கி வருகிறான்.
எப்போது பார்த்தாலும் இதில் குறை, அதில்
குறை என்று குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான். அப்படியானால் எஸ்.கே.விடம் குறைகள்
இல்லையா? இருக்கிறது. ஆனால், அதை அடுத்தவர்கள் யாரும் சொல்லக் கூடாது. எஸ்.கே. மட்டுந்தான்
குறைகளைச் சுட்டிக் காட்டுவான். அடுத்தவர்கள் யாரும் சுட்டிக் காட்டக் கூடாது. அதாவது
அவன் யாரை வேண்டுமானால் அடிக்கலாம், அவனை யாரும் அடிக்கக் கூடாது என்பது போல.
எஸ்.கே. அடங்க மாட்டானா? திருந்த மாட்டானா?
உணர மாட்டானா? அவரவர்க்கு அனுபவம் வரும் காலம் என்ற ஒன்று இருக்கிறது. அதுவரை யாரும்
அடங்குவதில்லை. திருந்துவதில்லை. உணர்வதில்லை.
*****
No comments:
Post a Comment