19 Sept 2017

கட்சியைக் கட்டமைத்தல்

கட்சியைக் கட்டமைத்தல்
பதவிகளைப் பிடிக்க துரோகத்தைக் கட்டமைக்க வேண்டும்
கண்ணில் எதிர்பாராமல் விழும் தூசிக்கும்
எதிரிகளைக் குற்றம் சொல்ல வேண்டும்
சதி, சூது என்ற சொற்களை
அனிச்சையாய்த் தன்னையுமறியாமல்
சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்
பதவிக்குப் பின் இருக்கும்
பெருஞ்செல்வத்தைப் பிரமாண்டம் மறைத்திருக்கும்
பிரமாண்டத்தைப் பார்த்து
மூக்கில் விரல் வைப்பவர்கள்
இருக்கும் வரையில்
கவலைப்படாமல் கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கலாம்
உங்கள் சபதங்களைத் தங்கள் சபதங்களாய்ப் பார்த்து
மரணக் குழியில் விழுவார்கள் மனிதர்கள்

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...