இதுதான் அந்த ரகசியம்!
ஜெயிலுக்குப் போக முடியாது என்று அடம்
பிடித்த சமத்து சம்புலிங்கத்தை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி ஜெயிலுக்கு அழைத்துச்
சென்றார்கள்.
எப்படி இது நிகழ்ந்தது? என்பதுதான் அப்போதைய
ஹாட் டாபிக்காக இருந்தது. அந்த பரம ரகசியம் தெரிந்தால் புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?
ஜெயிலுக்குப் போக முடியாது என்று அடம்
பிடித்தால் கைது செய்து தர தரவென்று இழுத்துச் செல்வார்கள் என்று சொல்லியும் சமத்து
சம்புலிங்கம் கெத்தாக முடியாது என்று மறுத்தார்.
ஒரு பெரும் தலைவரை இப்படி மிரட்டினாலும்,
அப்படியெல்லாம் கைது செய்து அழைத்துச் செல்லத்தான் முடியுமா?
"ஜெயிலுக்குப் போறது எப்படி இருக்கும்னா,
சொகுசு விடுதிக்குப் போறது மாதிரிதான் இருக்கும்!" என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டதும்,
சமத்து சம்புலிங்கம் ஒர வார்த்தைப் பேச வில்லை.
ஜீப்பில் ஏறி கிளம்பிச் சென்று விட்டார்.
ரகசியம் சப்பென்று ஆகி விட்டதாகச் சொன்னால்
அதற்கு சோதிலிங்கம் பொறுப்பேற்க மாட்டான்.
*****
No comments:
Post a Comment