மானமுள்ள பொழைப்பு!
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
சோதிலிங்கம் வேலை நீக்க எச்சரிக்கையால் மதியத்திற்குள் கையெழுத்துப் போட பதறியடித்து
ஓடி வந்தான்.
மதியானச் சாப்பாட்டை புல் கட்டு கட்டி
விட்டு, மதிய தூக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த சமத்து சம்புலிங்கம் இதைப் பார்த்து,
"ச்சே! சரியான மானங்கெட்ட பொழப்பால்ல இருக்குது!" என்றான்.
"அதாம்பா! எந்த வித பொருளாதார உரிமையும்
இல்லாத மானமுள்ள போழப்பே மேலானதுன்னு கையெழுத்துப் போட வந்துட்டேன்!" என்றான்
வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த சோதிலிங்கம்.
*****
No comments:
Post a Comment