ஐயனார் விழா
காட்டு மரங்கள்
ஊர் வயல்கள்
தோப்புகள்,
கொல்லைகள்,
ஆடு, மாடு,
கோழிகளைக் காத்த
ஐயனார்க்கு
காவல் கூலி
வருடம் ஒரு
முறை
கிடா வெட்டி
கோழி அறுத்து
போடும் பூசை.
காட்டு மரங்களை
வெட்டி
ஊர் வயல்களைப்
ப்ளாட் போட்டு
தோப்பு, கொல்லைகளில்
வாடகை வீடுகள்
கட்டி
ஆட்டு, மாட்டு,
கோழிக் கறிகளை
பன்னாட்டு
கடைகளில் வாங்கித்
தின்னப் பழகி
விட்டப் பிறகு
டாஸ்மாக்கில்
சரக்குகளை வாங்கிப் படைத்து
நள்ளிரவில்
ஏற்பாடு செய்யும்
குத்து டான்ஸோடு
நிறைவு பெறுவதாகி
விட்டது!
*****
No comments:
Post a Comment