11 Sept 2017

பேராபத்துக் காலத்தின் தெய்வங்கள்

பேராபத்துக் காலத்தின் தெய்வங்கள்
            அகலக் கால் வைப்பது ஆபத்தானது என்பார்கள். விவசாயம் செய்வது அப்படி இருக்கிறது. எவ்வளவு செலவாகிறதோ, அதை விவசாயத்தில் மீட்டெடுப்பது டைனோசரை மீண்டும் உருவாக்குவது போல் இருக்கிறது.
            மிகுந்த கவனமாக விவசாயம் செய்ய வேண்டி உள்ளது. வங்கிகள் விவசாயத்திற்கு எதிராக உள்ளன. விவசாயக் கொள்கைகள் விவசாயத்தை அழித்தொழிப்பதாக உள்ளது.
            எல்லா தடைகளையும் கடந்து விவசாயம் செய்வது வறண்டு போன ஆற்றில் கற்பனையில் நீச்சல் அடிப்பது போல இருக்கிறது.
            மல்லையாக்களின் ஏப்ப ஒலி கேட்கும் நாட்டில் விவசாயகக் கடன்கள் உடனடியாக அவகாசமின்றி வசூலிக்கப்படுகின்றன. அல்லது ஜப்தி செய்யப்படுகின்றன.
            ஆகவே விவசாயம் என்று வங்கிகளை நெருங்குவதைப் போல பேராபத்து எதுவுமுண்டே! கந்து வட்டிக் காரர்களை நம்பி விவசாயம் செய்வதைப் போல மரண ஆபத்தும் வேறு எதுவுமுண்டோ!
            விவசாயம் வேண்டாம் என்று அந்த முடிவிலிருந்து வெளியேறி விடுவது கெளரவக் குறைச்சல் அன்று. அது ஒரு நல்ல முடிவு.
            தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது போல, விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து வேண்டாம் என்று விலகி விடுவது ஒரு நல்ல தப்பித்தல்.
            மேற்படியான ஓர் எண்ணம் ஏற்பட்டதற்காக காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே என சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
            இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்களே! அவர்களை விவசாயிகள் என்று எப்படிச் சொல்வது?
            அவர்கள் தெய்வங்கள்!

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...