11 Sept 2017

நெஞ்சில் அடிக்கும் ஆணி

நெஞ்சில் அடிக்கும் ஆணி
            ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர்.
            நீ என் மாற்ற முயலுகிறாய்? அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்பான் எஸ்.கே.
            அவைகளெல்லாம் துன்பத்தின் வித்துகளா?
            அவரவர் மனதில் பிரச்சனைகள் தாமரை இலைத் தண்ணீர் போல இருக்கின்றன. அவரவர் மனதோடு தொடர்பு ஏற்படும் போது சதையோடு ஒட்டிய நகம் போலாகி விடுகின்றன.
            நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படி உங்களால் இருக்க முடியாவிட்டால் அது உங்களுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை.
            ஒன்றை நிகழ்த்த முற்படும் போது அதற்கான சூழல் நிலவாவிட்டால் சொல்ல வேண்டியதில்லை, அது மற்றுமொரு பிரச்சனையின் அநாவசிய மன உளைச்சலுக்கான துவக்கம்.
            துன்பத்தைத் துறக்க வேண்டும் என்றால் துன்பத்திற்குக் காரணமான ஆசையை துறக்க வேண்டும் என்பான் எஸ்.கே.
            அவன் மனச்சோர்வுற்றிருந்த காலக் கட்டத்தில், எதிர்மறைச் சிந்தனைகளின் மீள முடியாத தாக்கத்தில் ஆழ்ந்திருந்த காலக் கட்டத்தில்,
            மகிழ்ச்சியோடிரு,
            சுறுசுறுப்போடிரு,
            துணிவோடிரு,
            தன்னம்பிக்கையோடிரு
                        என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான். அவன் தன் முகத்தைச் சிரித்த வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். அது அவனுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை விளைவித்ததாக பகிர்ந்து கொண்டிருக்கிறான்.
            "மனிதன் பிறந்தது மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தானே. மகிழ்ச்சியின்மையால் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதா? வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் மகிழ்ச்சிதான்!" எஸ்.கே. இதை அடிக்கோடிட்டு தன் நெஞ்சில் மாட்டி வைத்திருப்பதாகக் கூறுவான்.
            மாட்டி வைத்திருப்பதாகக் கூறும் அவன் எந்த இடத்தில் ஆணி அடித்து இருக்கிறான் என்பது ரகசியம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...