20 Sept 2017

குடும்பப் பிரச்சனைகளுக்குக் குறிப்பான ஒரு தீர்வு!

குடும்பப் பிரச்சனைகளுக்குக் குறிப்பான ஒரு தீர்வு!
            குடும்பம் மனக்கோளாறுகளுக்கான இடமாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஒருமித்த உணர்வு இல்லாமல் குடும்பம் நடத்துவதை விட கொடுமையான ஒன்று வேறொன்றில்லை.
            எங்கும் கோபப்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் இருக்கின்றன. குடும்பத்தில் மிக அதிகமாக அதற்கானச் சூழ்நிலைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் கோபப்படக் கூடாது.
            பொதுவாக கோபப்பட வைப்பார்கள். ஆனால், ஏன் கோபப்பட வேண்டும்? குடும்ப விவகாரங்களில் கோபப்படாமல் இருப்பவர் வென்றவர் ஆகி விடுகிறார். கோபத்தால் வென்றாலும் அவர் தோற்றவராகி விடுகிறார்.
            கோபப்பட்டால் அதன் விளைவுகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் கோபப்படுதலே எல்லா சிக்கல்களுக்கும் முதன்மையான முடிச்சாக இருக்கிறது.
            அத்தனை நாள்கள் இல்லாமல் ஒரு நாள் குடும்பத்தில் இருப்பவர்களைக் கோபமாகத் திட்டி இருக்கலாம், அடித்து இருக்கலாம்.
            ஏன் அப்படி நிகழ்கிறது? மன இறுக்கம் ஒரு காரணம். குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும், நினைத்ததைச் செய்ய வேண்டும்,  ஆனால், அதற்கான ஒத்துழைப்பு இல்லையே என்ற மனத்தோற்றம் மிக முக்கியமான காரணம்.
            குடும்பத்தைப் பொருத்த வரையில் ஒருவர் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டுமா என்ன? அவரவர் விருப்ப்படி இருக்க அவரவர்க்கு உரிமை உள்ளது அல்லவா! அதனால் ஒன்றைச் சொல்வதற்கு முன் அதைக் கேட்கும் மனநிலையில் இருக்கிறார்களா என்பதை எண்ணிப் பார்த்து அதற்கான முயற்சியைச் செய்யத் துவங்க வேண்டும்.
            குறிப்பாகக் கேட்கும் திறன் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது சொல்வதைக் கேட்டு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அது இயலாது என்பவர்களிடம் சொல்லி விட்டு அவர்கள் செய்யவில்லையே என்று அதற்காக வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ பொருத்தமாக இருக்க முடியாதுதானே!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...