20 Sept 2017

மென்மையின் வலிமை

மென்மையின் வலிமை
மென்மை வலிமையானது.
மென்மையை மென்மேலும்
வலிய கரங்கள் கொண்டு
நசுக்கினாலும், பிழிந்தாலும்
அது மென்மெலும் மென்மையாகத்தான் போகும்.
வலிமைகள் இரண்டு மோதிக் கொண்டு
உடைந்து பொடிப் பொடியாகும் போது
மென்மையாகி விடும்.
மென்மையை மென்மேலும்
மென்மையாக்கினாலும் மென்மைதான்
வலிமையை மென்மேலும்
வலிமையாக்கினால் உடைந்து சிதறும்
ஒரு புள்ளியில்
வலிமை மென்மையாகி விடும்.

*****

No comments:

Post a Comment