2 Sept 2017

றெக்கை முளைத்து பறந்த அயர்ன் பாக்ஸ்

றெக்கை முளைத்து பறந்த அயர்ன் பாக்ஸ்
            பொறுமையாகப் போய்க் கொண்டிருந்த எஸ்.கே.வுக்கு அயர்ன் பாக்ஸைத் தூக்க அடிக்கும் அளவுக்குச் சீற்றம் ஒரு நாள் வந்தது.
            அயர்ன் பாக்ஸ் செய்த புண்ணியம் உடையாமல் போய் விழுந்தது.
            எதிரில் நின்றிருந்த மனிதன் போன பிறவியில் செய்த பாவம், அவன் மண்டை உடைந்து போனது.
            என்னை ஏன் சீண்டிப் பார்க்கிறீர்கள் என்ற கோபம்தான் அயர்ன் பாக்ஸ் பறந்ததற்குக் காரணம் என்றான் எஸ்.கே.
            யாரும் சீண்டிப் பார்க்க வாய்ப்பில்லாமல் ஒதுங்கியிருக்கலாம் என்று மேலும் அவன் சொன்னதைக் கேட்ட அயர்ன் பாக்ஸ் நிஜமாகவே றெக்கை முளைத்துப் பறந்தது.
            கொஞ்சம் அதிகமாக அன்பு வைத்தால் அதை சீண்டிப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று குறைபட்டுக் கொண்டான் எஸ்.கே. அவர்கள் சீண்டியதை எல்லாம் பொறுத்துக் கொண்டால்தான், அவர் மீது உண்மையான அன்போடு இருப்பதாக ஒத்துக் கொள்கிறார் என அழுதான்.
            எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தன் மனதுக்கு ஒரு பிராது பெட்டிஷன் போடுவதாக எஸ்.கே. அனைவரிடமும் சொன்னான்.
            தான் டென்ஷன் ஆவதை தயவுசெய்து அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு அலாதியான இன்பம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற எஸ்.கே. விற்கு அதன் பின் டென்ஷன் ஆவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. என்ன காரணம் என்கிறீர்களா? அயர்ன் பாக்ஸ் பறப்பதை யாரும் விரும்பவில்லை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...