1 Sept 2017

இப்படி நினைக்கிறான் எஸ்.கே.!

இப்படி நினைக்கிறான் எஸ்.கே.!
            உத்திரபிரதேசம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2017 ஆகஸ்டில் மட்டும் 290 குழந்தைகள் மரணம் என்ற செய்தியைப் பார்த்தான் எஸ்.கே.
            "ஆத்தி! அது குழந்தைகளைக் காப்பாற்றுகிற ஆஸ்பத்திரியா? கொல்லுற ஆஸ்பத்திரியா?" அரண்டு போனான்.
            கமலின் அரசியல் பிரவேசம் குறித்த என்ன நினைக்கிறான் எஸ்.கே. என்று தெரியுமா? என்று ஆளாளுக்குக் கொழுத்திப் போட பதில் சொல்வது என்று முடிவெடுத்தான்.
            "கமல் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு நினைக்கவில்லை. வந்தால் நன்றாக இருக்குமே!" என்று கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்குக் கமல் சொன்ன பதிலை உல்டா அடித்தான்.
            தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்  மூன்று நான்காக உடைந்துப் போய் கிடந்தான் எஸ்.கே.
            அவனைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவன் தீவிர மல்டிபிள் டிஸ்ஸார்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொன்னார்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...