2 Sept 2017

அதி மோசமான மனதின் பிரசவங்கள்

அதி மோசமான மனதின் பிரசவங்கள்
            சிந்திப்பது ஒரு நல்ல முறை. மீண்டும் மீண்டும் சிந்தித்து மன அமைதியைக் குலைத்துக் கொள்வது ஒரு மோசமான முறை. அப்படி மனம் இருக்கக் கூடாது.
            ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படையே மன அமைதிதான். அது இல்லாமல் எதையும் செய்வது நல்லதன்று.
            எல்லாவற்றின் இறுதி நோக்கமும் மனசாந்தி எனப்படும் மன அமைதிதான் எனும் போது, அதைத் தொலைத்து விட்டு, அது இல்லாமல் காரியமாற்றி என்னவாகப் போகிறது?
            சாமன்யத் தன்மையைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. அது மிகவும் வலிமையானது. எளிமையானதும் கூட. அதுதான் காந்தியடிகள் பெற்ற வெற்றியின் இடம். அவர் எளிமையாக ஒரு விசயத்தை விடாப்பிடியாகச் செய்து கொண்டே இருந்தார். அது அவருக்கு அளவற்ற மன உறுதியையும், செயலாற்றலையும் தந்து கொண்டே இருந்தது.
            ஒரு செயலை ரொம்ப கறாராக வடிகட்டிப் பார்க்கக் கூடாது. அது காரியத் துல்லியத்தைக் குறிப்பது அன்று. அந்த காரியமே நிகழாமல் போவதற்கான அறிகுறி. ஏனென்றால், அது ஒரு கட்டத்தில் மனஇறுக்கத்தில் சென்று முடியும்.
            ஒரு மோசமான மனஇறுக்கம் உள்ள மனம், பத்து அதிமோசமான மனதைப் பிரசவிக்கும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...