1 Sept 2017

என்னதான் செய்வது என்பவர்களுக்காக...

என்னதான் செய்வது என்பவர்களுக்காக...
            மனதை இயல்பாக வைத்துக் கொள். சாதாரணமாக வைத்துக் கொள். உன் மனதுக்கு இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்.
            இந்த உலகில் எல்லாம் ஒரு நாளில் நடக்கத்தான் போகிறது.
            அவைகள் எல்லாவற்றையும் இன்றே நடக்க வேண்டும் என்று ஆசைபடுவதுதான் பிரச்சனைகளுக்குக் காரணமன்றோ!
            உனது திட்டமிடல் என்பது ஒரு வசதிக்காகத்தான். அது திட்டமிட்டபடி நடப்பது என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது என்பதை அறிந்து கொள் அல்லது அறியாமல் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடு.
            திட்டமிட்டபடி இம்மி பிசகாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பவன் மனஇறுக்கம் உள்ள மடையன் அல்லது புத்திசாலி வியபாரி.
            மனஇறுக்கம் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்த பிறகு, அந்தக் காரியத்தைச் செய்யாமலே இருந்திருக்கலாமே என்று நினைக்கும் அநேகர்கள் பூமியில் உண்டு. அவர்களால் அவர்களுக்கும் பயனில்லை. பூமிக்கும் பயனில்லை. பூமியின் தலையெழுத்து அவர்களைச் சுமந்து கொண்டு இருக்கிறது.
            இந்த லோகத்தில் யாரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி, அதை செய்யுங்கள் என்று கூறி விடாதே. அதை அவர்கள் செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
            என்னதான் செய்வது என்கிறாயா?
            எல்லாம் ஒரு அளவு. அது கூடவும் கூடாது. குறையவும் கூடாது. அளவைத் தாண்டிக் குதிப்பதை நிறுத்திக் கொள். அப்போது நீ எதையும் செய் என்று யாரிடமும் கூற வேண்டாம். நீ சொல்வதைக் கேட்டுச் செய்ய ஒரு கூட்டம் உன் முன் நின்று கொண்டிருக்கும்.

*****

No comments:

Post a Comment

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...