கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டி...
(((மன்னிக்கவும்!)))...
காசு இருந்தால் போதும். குறைந்தபட்ச மதிப்பெண்களை
எடுத்தாலும் போதும். மருத்துவம் படித்து மருத்துவராகலாம்.
காசு இல்லாவிட்டால் சிக்கல். கட் ஆப் மதிப்பெண்களில்
0.1 மதிப்பெண் மருத்துவக் கனவைக் கலைத்து விடலாம்.
அனிதாவின் மரணம் தற்செயலாக நிகழ்ந்து விடவில்லை.
உச்சநீதி மன்றம் வரை சென்று போராடிய பிறகு நிகழ்ந்திருக்கிறது.
தானாக தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலைக்குத்
தள்ளுப்படுவதும் ஒன்றல்ல. அனிதாவின் மரணம் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட மரணம்.
தற்கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க
வேண்டும் என்பது சட்டம். யாரைத் தண்டிப்பது? யாரைக் கண்டிப்பது?
மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்வியின்
தரம் பற்றிப் பேசுபவர்கள் ஜஸ்ட் பாஸ் செய்து பணத்தைக் கொட்டிக் கொடுத்து சுயநிதிக்
கல்லூரிகளில் படிப்பவர்களைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?
காசில்லாத உனக்கெல்லாம் எதுக்கு மருத்துவப்
படிப்பு என்றா? அல்லது மருத்துவம் கிடைக்காவிட்டால் உன் கனவுகளை நசுக்கி விட்டு எது
கிடைக்கிறதோ அதைப் படி என்றா?
*****
No comments:
Post a Comment