பரணி பாடுதல்
காடுகளின்றி யானைகள் வாழ வழியில்லை
யானைமலையும் கிரானைட் மாபியாக்கள்
கண்களினின்று தப்பவில்லை
காட்டு மரங்களையெல்லாம் வெட்டி
வீடு கட்டி வீட்டுக்கொரு மரம் வளர்த்தோம்
மலைகளைக் கிரானைட்களாகப் பெயர்தெடுத்து
மனையிலிட்டு சுவர்கள்தோறும்
மலைகளின் படங்களை மாட்டி வைத்தோம்
காடுகளில் திரிந்த யானைகளை ஷோகேஷில்
வீடுகளில் பொம்மைகளாக்கி வாழ விட்டோம்
தப்பியோடிய யானைகளை
தண்டவாளத்தில் நிறுத்தி தண்டனை கொடுத்தோம்
கோயில்வாழ் யானைகளைத் தொழுது
அந்த பாவங்களைப் போக்கிக் கொண்டோம்
தெருவலம் வரும் யானைக்கு நாணயமிட்டு
பரிகாரம் தேடிக் கொண்டோம்
ஆயிரம் பல்லாயிரம் யானை கொன்ற
நமக்கு நாமே பரணிப் பாடிக் கொண்டோம்!
*****
No comments:
Post a Comment