முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்
தெரியுமா?
முடியாதது என்பது இல்லை.
முடியாது என்று நினைப்பதற்கு மூலம் மிகையான
எதிர்பார்ப்புதான்.
ஒருவரின் மீது சம்பந்தம் இல்லாமல் ஏற்படும்
கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்றவைகளுக்கு மூலமும் மிகையான எதிர்பார்ப்புதான்.
நம்மால் முடிகிறது. முடியாதது இல்லை. ஆனால்,
நம் எதிர்பார்ப்பின் அளவு அந்த அளவு அல்ல. அதைத் தாண்டியதாக இருக்கிறது. அது அந்தச்
செயலை நாம் எதிர்பார்த்த அளவுக்குச் செய்ய முடியாமையை முன்னிருத்தி, அப்படிச் செய்தால்தான்
அந்தச் செயலைச் செய்தது போல ஆகும் என்ற பிம்பக் கட்டுமானத்தை உருவாக்கி, நம்மால் முடியவில்லையே
என்று உணர வைத்து விடுகிறது.
நம்மால் முடிகிற ஒன்றும் மிகையான எதிர்பார்ப்பால்
முடியாதது போல தோற்றம் கொள்ளும்.
எல்லா பிரச்சனைகளுக்கும் மிகையான எதிர்பார்ப்பு
ஒரு பிரச்சனை.
உங்களால் முடியாமல் எதுவும் இல்லை. ஆனால்,
இன்னும் நன்றாக எனும் நினைக்கும் போது அது முடியாதோ என்று நினைக்கத் தோன்றும். இப்படித்தான்
நம்முடைய இயலாமைகள், எரிச்சல்கள், வெறுப்புகள், எதிர்மறை எண்ணங்கள் உற்பத்தி ஆகத் தொடங்ககின்றன.
எவர் மீதும் மிகையான எதிர்பார்ப்பை வளர்த்துக்
கொள்ளவும் கூடாது. அவர்களின் மீது மிகையான எதிர்பார்ப்பைத் திணிக்கவும் கூடாது. அவ்வாறு
செய்வதால் அவர் மீது நமக்கு கோபம், எரிச்சல் ஏற்படுவது இயல்பாக நிகழும்.
அவர்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அவர்களுக்கானவர்கள். நம்முடைய இலக்குக்கானனவர்கள்
அல்ல என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.
நாமும் நாமாக இருக்க வேண்டும் எந்த வித
மிகை எதிர்பார்ப்புகளும் அல்லாமல். நாமும் நமக்காக என்பதில் தெளிவு கொள்ள வேண்டும்.
*****
No comments:
Post a Comment