22 Sept 2017

உள்ளாடையில் பரவும் சிறுநீர்

உள்ளாடையில் பரவும் சிறுநீர்
சுதந்திரமாக சிறுநீர்க் கழிப்பதற்கான அபாயம்
நகரத்தில் உள்ளது
பாதிக் கழித்துக் கொண்டிருக்கையில்
பின்னே எவரேனும் வந்து நெட்டித் தள்ளலாம்
எதிர்பாலினர் கடக்க நேர்கையில்
வெட்கம் பிடுங்கித் தின்னலாம்
கிளம்பும் போது வீட்டில்
கழித்து விட்டு வந்திருக்க வேண்டும் என்று
தன் மேல் கோபப்படத் தெரிகிற மனதுக்கு
பெரும் கட்டிடங்களும்
வாகனங்களும்
வனப்புகளும் நிறைந்த நகரத்தில்
ஒரு கிலோ மீட்டருக்கேனும்
ஒரு பொதுக் கழிவறை இல்லையே
என்று கேள்விக் கேட்கத் தோன்றுவதில்லை.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...