இப்படிக்கும் அப்படிக்கும் நண்பன் ஒருவன்
எஸ்.கே.வுக்கு கோபம் என்னவென்றால் எதற்கும்
பதில் கிடைப்பதில்லையே என்பதுதான்.
அவன் கட்டிய பணத்திற்கு ரசீதுகள் வருவதில்லை.
அதற்கான காரணத்தை யாரும் அவனிடம் சொல்வதில்லை. அதெல்லாம் அப்படித்தான் என்பது போல
பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அவனை.
எல்லோரும் அப்படித்தான். அடுத்தவர்களின்
மனநிலை புரியாதவர்கள்.
எஸ்.கே.யின் நண்பன் ஒருவன். அவன் நினைப்பதுதான்
பெரிது என வாழ்பவன். அவனை எதுவும் சொல்வதற்கில்லை. தன் குறுகிய வட்டத்திற்குள் சுழன்று
தன்னுடைய சிறிய பிரச்சனையையும் பூதாகரமாக ஆக்கிக் கொள்வான்.
அவன் அப்படி எனத் தெரிந்தும் அவனிடம் எஸ்.கே.
பேசுவான். அது மாபெரும் முட்டாள்தனம். எஸ்.கே. அதைச் செய்து விடுகிறான்.
பேசினால் மனம் திறக்கும், மனதின் சிக்கல்
உடையும் என்று எஸ்.கே. நினைக்கிறான். மாறாக அவனைப் பொருத்த வரையில் அது பெருகுகிறது.
அவன் எப்படி அவன் வட்டத்தை விட்டு வெளியே
வருவான். அது கூட பரவாயில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அநாவசியமாக
எஸ்.கே. மீது பழியைப் பரப்பி விட்டு விடுவான்.
இப்போது எஸ்.கே.விற்குக் கோபம் என்னவென்றால்
இந்தப் பழிக்கு என்ன காரணம் என்ற பதில் அவனுக்கு கடைசி வரை கிடைக்காததுதான்.
*****
No comments:
Post a Comment