12 Sept 2017

அது... அது... அது...

அது... அது... அது...
அது 99 சதவீத ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறது
ஒரு சதவீத பணக்காரர்களுக்காகச் செயல்படுகிறது
99 சதவீத ஏழைகளுக்கு என்ன செய்ய வேண்டும்
என்பதை
ஒரு சதவீத பணக்காரர்களிடம் கேட்கிறது
ஒரு சதவீத பணக்காரர்களை
என்ன செய்ய வேண்டும் என்பதை
99 சதவீத ஏழைகளிடம் கேட்பதில்லை
அதையும்
அந்த ஒரு சதவீத பணக்காரர்களிடமே கேட்கிறது!

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...