பூஜ்யத்தைத் தொட்டு விட்ட பிரச்சனைகளின்
எண்ணிக்கை
எஸ்.கே. சமீப காலமாக பிரச்சனைகளைச் சுலபமாகக்
கையாள்கிறான். இதற்குக் காரணமாக அவன் கருதுவது அது குறித்து அவன் வெளியில் எதுவும்
பேசாமல் இருப்பதுதான். இதனால் பல பிரச்சனைகள் முதலில் பிரச்சனைகளாகத் தெரிகின்றன. பின்பு
அவைகள் சுவடு தெரியாமல் ஓடி விடுவதாக எஸ்.கே. கருதுகிறான்.
எந்தப் பிரச்சனை குறித்தும் எஸ்.கே. வெளியில்
பகிர்ந்து கொள்ளாத காரணத்தால் அது குறித்து அவனால் சுதந்திரமாகச் செயல்பட முடிவதாகக்
கூறுகிறான்.
ஒரு பிரச்சனை குறித்து அவர்கள் என்ன நினைப்பார்கள்,
இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையே அவனைப் பாதி கொன்று போட்டுக் கொண்டிருந்தது.
அவன் இப்படி இருந்தவனில்லை. பிரச்சனைகளை
வெளியில் பேசினால் தீர்வு கிடைக்கும் என எண்ணி அவன் பேசிப் பிரச்சனைகள் பெரிதானதே தவிர,
சிறிதாகவில்லை.
பேசினால் ஓர் ஆறுதல் கிடைக்கும் என நினைத்து
வேறு பல பிரச்சனைகளால் இழுபட்டு எஸ்.கே. மேற்கண்டவாறு மாறி விட்டான்.
இப்போது சில நாட்களாகவே யாரும் எஸ்.கே.யிடம்
எதையும் பிரச்சனை என்று கொண்டு வர முடியவில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் அதற்குக்
காரணம் அவன்தான் என்று நிறுவ முடியவில்லை.
அதற்கெல்லாம் காரணமாக அவன் எதையும் பகிர்ந்து
கொள்ளாமையையேக் கருதுகிறான். அதனால் அவன்தான் அதை பேசியிருப்பான், அவன்தான் அதற்கு
யோசனை கூறியிருக்கிறான் என்று அவன் எதிரிகளால் கூட அனுமானிக்க முடியவில்லை.
அவன் எந்தப் பிரச்சனை குறித்தும் வெளியில்
பேசாமல் இருப்பதால் கோள் சொல்பவர்களுக்கு வாயில் போட அவல் கிடைக்காமல் அவதிப்படுவதாக
நினைக்கிறான். புதிய புதிய சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் உருவாகாமல் இருந்தால் போதும்
என்பதில் எஸ்.கே. இப்போதெல்லாம் கவனம் செலுத்துவதில்லை.
பேசாப் பொருள் ஒன்றில் எப்படி கவனம் செலுத்த
முடியும்? எஸ்.கே.வின் எதிரிகள் பேசிப் பேசி ஓய்ந்து போகிறார்கள்.
எஸ்.கே.யிடம் பிரச்சனையைப் பற்றி பேசுபவர்களின்
எண்ணிக்கை அண்மையில் பூஜ்யத்தைத் தொட்டு விட்டது.
*****
No comments:
Post a Comment