13 Sept 2017

பாலைத் திணை

பாலைத் திணை
இலையுதிர் கால மரங்கள் போல்
முடிகள் உதிரத் தொடங்கின
வசந்த கால வேப்ப மரம் போல்
சில நரை முடிகள் துளிர் விட்டன
முன்தலை வழுக்கையும்
பிறை வடிவில்
வளரத் தொடங்கி விட்டது
இயற்கை எனக்கு நினைவூட்டுகிறது
அவளைப் பிரிந்து
நாட்கள், மாதங்கள், ஆண்டுகள்
ஆகி விட்டன என்பதை.
ஒரு முறை சென்று திரும்பும்
சில லட்சச் செலவு
பிள்ளைகள் படிப்பிற்காகும் என்பதைக்
கருத்திக் கொண்டதாக நீள்கிறது
இன்னும் இன்னும்
இந்தப் பிரிவுத் துயர்!

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...