13 Sept 2017

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் - பார்ட் 2

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் - பார்ட் 2
            எஸ்.கே.வுக்குப் போராட வேண்டும் என்பது இரத்தத்தில் ஊறிய கொதிப்பு. அவனது போராட்டத் தினவைச் சொரிந்து விடுவது போல போராட்ட அறிவிப்பு வர சீறி எழுந்தான்.
            "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் பணியில் சேர்ந்த இருபது நாள்களிலே போராடி சிறை சென்று களம் கண்டவனய்யா நான்! ஆகவே சங்கங்கள் அறிவிக்கும் போராட்டங்களில் தங்கமாய் கலந்து கொள்ள வேண்டும்!" என்று தன் கீழ் பணியாற்றும் சகாக்களிடம் எழுச்சி தீயை பற்ற வைத்தான்.
            எஸ்.கே. பற்ற வைத்த தீ காட்டுத் தீயாய் கண்ட மேனிக்கு காட்டுத் தனமாய்ப் பரவியது.
            மறுநாள்...
            அந்தோ பரிதாபம்!
            எஸ்.கே.யின் சங்கம் போராட்ட முடிவிலிருந்து விலக, சும்மா இருப்பானோ எஸ்.கே?
            வெகுண்டு எழுந்தான்.
            தன் கீழ் பணியாற்றும் சகாக்கள் யாரேனும் போராட்டத்தில் கலந்து கொண்டால் மோசமான பின்விளைவுகளை அவர்களே எதிர்கொள்ள வேண்டும் என்று கர்ஜனை செய்தான்.
            அத்தோடு விடுபவனோ எஸ்.கே?
            தன் கீழ் பணிக்கு வரும் சகாக்களை மிரட்டுவதாக புகார் பத்திரம் எழுதி அமெரிக்க அதிபர் வரைக்கும் அனுப்ப எத்தனித்தான்.
            ஏன் வேலைக்கு வரவில்லை என்ற காரணக் கேட்பு நோட்டீஸை நானிலத்துக்கே முதன் ஆளாக முன் நின்று வீடு தேடி விநியோகிக்கும் வேலையில் இறங்கினான்.
            எதிலும் உண்மையாக உழைப்பவன் அன்றோ எஸ்.கே!
            காரண கேட்பு நோட்டீஸை எதிர் கொள்வதை விட எஸ்.கே.யை எதிர்கொள்வது பெரும்பாடு அல்லோ!
            கடவுள் கடனே என்று இருந்தாலும் பூசாரி உடனே ஆர்ப்பரிப்பார் அன்றோ!

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...